காடையாம்பட்டியில் பாமகவினர் 40 பேர் மீது வழக்கு

காடையாம்பட்டி, டிச.24:  சேலம் மாவட்டம் காடையாம்பட்டி மேற்கு ஒன்றியத்தில், நேற்று முன்தினம் பாமக மாவட்ட தலைவர் மாணிக்கம், 5வது வார்டு மாவட்ட கவுன்சிலர் அண்ணாமலை ஆகியோர் தலைமையில் அக்கட்சியினர்  திமுகவினருடன் தகராறில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து தீவட்டிப்பட்டி போலீசார் அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். இந்நிலையில், தாராபுரம் விஏஓ திரவிய கண்ணன், 144 தடை உத்தரவை மீறி அனுமதியின்றி கூட்டம் கூடி தகராறில் ஈடுபட்டும், தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்ட காரணத்தால் பாமகவினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தீவட்டிப்பட்டி போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் பாமக மாவட்ட தலைவர் மாணிக்கம், மாவட்ட கவுன்சிலர் அண்ணாமலை, காடையாம்பட்டி கிழக்கு ஒன்றிய செயலாளர் ராஜா, கிழக்கு ஒன்றிய வன்னியர் சங்கத்தலைவர் ராஜா, ஒன்றிய கவுன்சிலரின் கணவர் செல்லமுத்துஉள்பட 40 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: