விவசாய பொருட்களை எச்சரிக்கையுடன் உலர வைக்கவேண்டும்

தஞ்சாவூர், செப் 25: தஞ்சாவூர் மாவட்டத்தில் தேசிய மற்றும் நெடுஞ்சாலைகளிலும் மற்றும் அணுகு சாலைகளிலும் விவசாயப் பொருட்களை உலர வைத்தல் மற்றும் சேமித்தல் பணிகளை மேற்கொள்ளப்படுகிறது. வாகனங்களில் செல்பவர்கள் கவனிக்க முடியாமல் விபத்து நிகழ்கிறது. எனவே விவசாயிகள் விபத்து மற்றும் உயிரிழப்புகளை தவிர்க்க விவசாய பொருட்களை சாலைகளில் உலரவைப்பதை தவிர்க்க வேண்டும்.

வாகனங்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு எவ்விதத்திலும் இடையூறு ஏற்பபடி பணிகளை மேற்கொள்ள வேண்டும். எச்சரிக்கை பலகை அல்லது சிவப்பு நிற ஒளிரும் ஸ்டிக்கர் ஆகியவற்றை பயன்படுத்தி எச்சரிக்கை செய்து வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்காதபடி விவசாயிகள் ஒத்துழைக்கவேண்டுமென கலெக்டர் தெரிவித்துள்ளார்.

 

Related Stories: