தமிழக கவர்னர் டெல்லி பயணம்

மீனம்பாக்கம்: தமிழ்நாடு கவர்னர் இன்று காலை திடீர் பயணமாக, சென்னையில் இருந்து டெல்லி புறப்பட்டு சென்றார். கவர்னருடன் அவரது செயலாளர், பாதுகாப்பு அதிகாரி ஆகியோரும் சென்றனர். தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி திடீர் பயணமாக இன்று காலை 6 மணிக்கு, ஏர் இந்தியா பயணிகள் விமானத்தில், சென்னையில் இருந்து டெல்லிக்கு புறப்பட்டு சென்றார்.

இன்று மாலை 4.35 மணிக்கு அதே விமானத்தில் டெல்லியில் இருந்து சென்னை திரும்பி வருகிறார். கவர்னரின் திடீர் டெல்லி பயணம் குறித்து, அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை. சொந்த பயணமாக டெல்லிக்கு சென்றதாக கூறப்படுகிறது.

Related Stories: