70 முறைக்கு மேல் வடகிழக்கு மாநிலங்களுக்குத் தான் வந்துள்ளேன்: பிரதமர் மோடி பேச்சு

இடாநகர்: 70 முறைக்கு மேல் வடகிழக்கு மாநிலங்களுக்குத் தான் வந்துள்ளேன் ஏன் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். அருணாச்சலப் பிரதேசம், திரிபுரா மாநிலங்​களுக்கு இந்தியப் பிரதமர் நரேந்​திர மோடி இன்று பயணம் மேற்கொண்டார். அப்​போது அவர் ரூ.5,100 கோடி மதிப்​பிலான திட்​டங்​களுக்கு அடிக்​கல் நாட்டினார். அதன்பின்னர் வர்த்தகர்கள் மற்றும் வரி செலுத்துவோர் மற்றும் தொழில்துறை பிரதிநிதிகளுடன் கலந்துரையாடினார். அவர்களிடம் ஜிஎஸ்டி வரி குறைப்பால் ஏற்பட்ட நன்மைகள் குறித்துக் கேட்டறிந்தார்.

பின்னர் இட்டா நகரில் உள்ள இந்திரா காந்தி பூங்காவில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது; அருணாச்சலப் பிரதேசம் அமைதி மற்றும் நல்லிணக்கத்தின் பூமி. வடகிழக்கு மாநிலத்தை தில்லியில் இருந்து மேம்படுத்த முடியாது என்பது தனக்குத் தெரியும் என்பதால், அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளை அடிக்கடி இந்தப் பகுதிக்கு அனுப்பியதாகவும், 70 முறைக்கு மேல் வடகிழக்கு மாநிலங்களுக்குத் தான் வந்துள்ளதாகவும் அவர் கூறினார். காங்கிரஸின் உள்ளார்ந்த பழக்கம் என்னவென்றால், அவர்கள் ஒருபோதும் கடினமான வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ள மாட்டார்கள். காங்கிரஸ் ஆட்சியில் வடகிழக்கு மாநிலங்கள் புறக்கணிக்கப்பட்டது.

Related Stories: