கோவளத்தில் நடந்த அலைச்சறுக்கு போட்டி நிறைவு

சென்னை, செப்.22: தமிழ்நாடு அலைச்சறுக்கு சம்மேளனம் மற்றும் தமிழ்நாடு சுற்றுலா துறை இணைந்து ‘கோவ் லாங் – வாட்டர் பெஸ்டிவல் 2025’ எனும் கடற்சார் விளையாட்டு போட்டிகள் சென்னை அருகே கோவளத்தில் கடந்த 18ம் தேதி துவங்கி நேற்று வரை நடந்தன. இதில், 16 வயதுக்கு உட்பட்டோர், பொதுப்பிரிவு, ஆண்கள், பெண்கள் என நான்கு பிரிவுகளில் போட்டிகள் நடந்தது.

தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட 8 மாநிலங்களை சேர்ந்த 94 பேர் பங்கேற்றனர். நேற்று நடந்த போட்டி நிறைவு விழாவில், வெற்றி பெற்றவர்களுக்கு, செங்கல்பட்டு மாவட்ட சப்-கலெக்டர் மாலதி ஹெலன், திருப்போரூர் தாசில்தார் சரவணன், கோவளம் ஊராட்சி தலைவர் சோபனா தங்கம், இந்திய சர்பிங் பெடரேஷன் தலைவர் அருண் வாசு, மாமல்லபுரம் சுற்றுலா அலுவலர் சக்திவேல் உள்ளிட்டோர் பரிசு, சான்றிதழ் வழங்கினர்.

 

Related Stories: