அண்ணா பல்கலைக்கழக மேம்பாட்டு பணிகள் விரைவில் அரசாணை வெளியிடப்படும்: உயர்கல்வித்துறை செயலாளர் தகவல்

சென்னை: கிண்டி பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கத்தின் நூற்றாண்டு விழா நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன் மற்றும் உயர்கல்வி துறை செயலாளர் சங்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

புதிதாக கட்டப்பட்ட புகழ் மண்டபம், சிறிய ஒளிப்பட அரங்கு மற்றும் விருந்தினர் அறைகளையும், கல்லூரி முகப்பில் புனரமைக்கப்பட்ட கடிகார கோபுரத்தையும் அமைச்சர் கோவி. செழியன் திறந்து வைத்தார். உயர்கல்வித்துறை செயலாளர் சங்கர் பேசுகையில், ‘‘அண்ணா பல்கலைக்கழகத்தை ரூ.500 கோடியில் பல்வேறு வசதிகளுடன் மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கான அரசாணை விரைவில் வெளியிடப்படும்” என்றார்.

Related Stories: