டி20 பவுலிங் தரவரிசை வருண் நம்பர் 1

துபாய்: இந்திய அணி பந்து வீச்சாளர் வருண் சக்ரவர்த்தி டி20 கிரிக்கெட் பந்து வீச்சுக்கான தர வரிசையில் முதல் முறையாக முதல் இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளார். ஆசிய கோப்பை டி20 போட்டிகளில் ஆடி வரும் அவர், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிக்கு எதிராக, 4 ரன்னுக்கு ஒரு விக்கெட், பாகிஸ்தானுக்கு எதிராக, 24 ரன்னுக்கு ஒரு விக்கெட் வீழ்த்தினார். அதையடுத்து, 3 நிலைகள் உயர்ந்து, 733 புள்ளிகளுடன் வருண் முதலிடத்தை பிடித்து அசத்தியுள்ளார். முதலிடத்தில் இருந்த நியூசிலாந்து வீரர் ஜேகப் டஃப்பி (717 புள்ளி) 2ம் இடத்துக்கு தள்ளப்பட்டார். இந்த பட்டியலில் இந்தியாவின் ரவி பிஷ்னோய் 8வது இடத்திலும், அக்சர் படேல் 12ம் இடத்திலும் உள்ளனர்.

Related Stories: