யூபிஎஸ்சி தேர்வில் குளறுபடியா? மதுரை கலெக்டர் விளக்கம்

 

மதுரை: மதுரையைச் சேர்ந்த சீனிவாசன் என்பவர் இமெயில் மூலம் கலெக்டர் பிரவீன்குமார் மற்றும் யூபிஎஸ்சி தேர்வாணையத்தின் தலைவருக்கு அனுப்பியுள்ள புகார் மனுவில், நாடு முழுதும் யூபிஎஸ்சி தேசிய பாதுகாப்பு அகாடமி – கடற்படை அகாடமிக்கான தேர்வுகள் காலை மற்றும் மாலை நடந்தது. மதுரை காமராசர் பல்கலைக்கழக கல்லூரியில் நடந்த தேர்வுகளில் 700 பேர் பங்கேற்றனர். ஒவ்வொரு தேர்வு முடிந்ததும் விடைத்தாள்களை மதுரை தல்லாகுளம் தலைமை தபால் நிலையத்தில் ஒப்படைக்க வேண்டும். மாலையில் முடிந்த தேர்வின் சீல் வைக்கப்பட்ட விடைத்தாள்களுடன் தலைமை தபால் நிலையத்திற்கு
கொண்டு செல்லப்பட்டது.

ஆனால், ஒப்படைக்காமல், மீண்டும் கல்லூரி வளாகத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இது தேர்வு நடந்ததன் ரகசியம் மற்றும் நேர்மை குறித்து கவலையை ஏற்படுத்துகிறது. இது குறித்து தேர்வை நடத்திய பொறுப்பாளர்களிடம் விரிவான விசாரணை நடத்த வேண்டும், கல்லூரி வளாகத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ய வேண்டும் என கூறியிருந்தார்.

இந்த விவகாரம் குறித்து கலெக்டர் பிரவீன்குமார் கூறுகையில், ‘‘விடைத்தாள்கள் பாதுகாப்புடன் தபால் நிலையத்தில் எடுத்து செல்லப்பட்டுள்ளது. ஒரு விடைத்தாள் மட்டும் தேர்வு மையத்திலேயே இருந்துள்ளது. இது குறித்து தேர்வு மைய கண்காணிப்பாளரிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் மீண்டும் கொண்டு வந்துள்ளனர். ஏற்கனவே சீல் வைக்கப்பட்ட விடைத்தாள்கள் பண்டலை பிரித்து விடுபட்ட விடைத்தாளை பண்டலில் சேர்த்து மீண்டும் சீல் வைத்து தபால் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்’’ என்றார்.

 

Related Stories: