தபால் குறைதீர் கூட்டம்

கோவை, செப். 15: மண்டல அளவிலான தபால் குறைதீர்ப்பு கூட்டம் மேற்கு மண்டலம் அஞ்சல் துறை தலைவர் அலுவலகம், கே.பி.காலனி தபால் நிலையம் வளாகத்தில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான தேதி விரைவில் அறிவிக்கப்படும். எனவே, வாடிக்கையாளர்கள் தங்களின் புகார்களை துணை இயக்குனர் (மெயில் மற்றும் டெக்), அஞ்சல் துறை தலைவர் அலுவலகம், மேற்கு மண்டலம், கே.பி.காலனி தபால் நிலையம் வளாகம், கோவை 641030 என்ற முகவரிக்கு வரும் 17ம் தேதி அல்லது அதற்கு முன்பு கிடைக்கும் வகையில் அனுப்பி வைக்க வேண்டும்.

கடிதத்தின் மேல்உறையில் “தபால் குறை தீர்ப்பு கூட்ட புகார்” என எழுத வேண்டும். பதிவு தபால், விரைவு தபால், பணவிடை தொடர்பான புகார்களில் தபால் பதிவு செய்யப்பட்ட நாள், நேரம், அனுப்புநர், பெறுநர் முழு முகவரி, தபால் பதிவு எண் ஆகியவை குறிப்பிட வேண்டும். அஞ்சலக சேமிப்பு கணக்கு, காப்பீடு தொடர்பான புகார்களில், சேமிப்பு கணக்கு எண், காப்பீட்டு எண், சேமிப்பு கணக்கு வைத்திருப்பவர், காப்பீட்டாளர் பெயர் மற்றும் முகவரி, தபால் அலுவலகத்தின் பெயர், பணப்பிடித்தம் தொடர்பான தகவல்கள் ஆகியவை குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும் என கோவை மேற்கு மண்டலம் அஞ்சல்துறை தலைவர் தெரிவித்துள்ளார்.

 

Related Stories: