உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்

 

பாப்பிரெட்டிப்பட்டி, செப்.15: தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றியம் பட்டுகோணம்பட்டி, மஞ்சவாடி ஊராட்சிகளுக்கான உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் சாமியாபுரம் கூட்ரோட்டில் நடைபெற்றது.
முகாமிற்கு ஆர்டிஓ செம்மலை தலைமை வகித்தார். தாசில்தார் சின்னா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அறிவழகன், அபுல்கலாம் ஆசாத், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணை வட்டார வளர்ச்சி அலுவலர் உமா வரவேற்றார். முகாமில், மகளிர் உரிமைத்தொகை மற்றும் முதியோர் உதவித்தொகை, வீட்டுமனை பட்டா, ரேஷன் கார்டு, ஆதார் கார்டில் பெயர் மாற்றம் உள்ளிட்ட 13 அரசு துறைகள் மூலம் 43 சேவைகள் பெற 567 மனுக்கள் பெறப்பட்டது. நிகழ்ச்சியில் ஒன்றிய திமுக செயலாளர்கள் முத்துக்குமார், சந்தோஷ், முன்னாள் பஞ்சாயத்து தலைவர் அன்பழகன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Related Stories: