இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் வீரபாண்டியனுக்கு அன்புமணி வாழ்த்து

சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளராக தேர்வாகியுள்ள வீரபாண்டியனுக்கு அன்புமணி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய மாநில செயலாளராக தேர்வு செய்யப்பட்டிருக்கும் மு.வீரபாண்டியனுக்கு வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறேன்.

ஒடுக்கப்பட்ட மக்களுக்கு அரசியல் அதிகாரம் வழங்கப்பட வேண்டும் என்பதற்கிணங்க வீரபாண்டியன் தேசியக் கட்சியின் மாநிலச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. விவசாயிகள், தொழிலாளர்கள் மற்றும் சமூக நீதி போராட்டங்களில் முக்கிய பங்காற்றிய வீரபாண்டியனின் பொதுவாழ்வுப் பணிகள் தொடரவும், சிறக்கவும் வாழ்த்துகள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: