அறந்தாங்கி கோட்டாட்சியர் பொறுப்பேற்பு

அறந்தாங்கி, செப். 13: அறந்தாங்கி வருவாய் கோட்டாட்சியராக அபிநயா நேற்று பொறுப்பேற்றுக்கொண்டார்.  புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி வருவாய் கோட்டாட்சிர் சிவக்குமார். இவர், கரூர் மாவட்ட வழங்கல் அதிகாரியாக இடம்மாறுதலில் சென்றார். அதையடுத்து, கடலூர் கோட்டாட்சியர் அபிநயா, அறந்தாங்கி கோட்டத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.

அதையடுத்து, அறந்தாங்கி கோட்டாட்சியர் அலுவலகத்தில் அபிநயா கோட்டாட்சியராக பொறுப்பேற்றார். முன்னதாக, கலெக்டர் அருணாவை சந்தித்து வாழ்த்துபெற்றார். தொடர்ந்து, அறந்தாங்கி தாசில்தார் கருப்பையா, துணை தாசில்தார்கள், வருவாய் ஆய்வாளர்கள் உள்ளிட்ட வருவாய்த்துறையினர் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

 

Related Stories: