அல்பேனியாவில் அறிமுகம் உலகின் முதல் ‘ஏஐ’ அமைச்சர்

வாஷிங்டன்: ஊழலை ஒழிக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக, உலகின் முதல் ஏஐ அமைச்சரை நியமித்து அல்பேனியா நாடு வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது. ‘டியெல்லா’ (அல்பேனிய மொழியில் சூரியன்) எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த ஏஐ பாட், நாட்டின் பொது டெண்டர் நடைமுறைகளை மேற்பார்வையிட்டு, ஊழலைத் தடுக்கும் பணியில் ஈடுபடும்.

உலக அரசியலில் திருப்புமுனையாகக் கருதப்படும் இந்த அறிவிப்பை, பிரதமர் எடி ராமா வெளியிட்டார். டெண்டர் முடிவெடுக்கும் விசயம் தொடங்கி, பல்வேறு பணிகளை ஏஐ அமைச்சர் பார்க்கும். இதன்மூலம் லஞ்சம், ஊழல், முறைகேடுகளை முழுமையாக ஒழிக்க முடியும் என அரசு நம்புகிறது. பாரம்பரிய அல்பேனிய உடை அணிந்த டிஜிட்டல் அவதாரமாக ‘டியெல்லா’ உருவாக்கப்பட்டுள்ளது.

Related Stories: