திறந்தவெளி கழிப்பிடமாக மாறிய கால்வாய்

ஊட்டி, டிச. 21: ஊட்டி நகரில் ஏ.டி.சி., பகுதியில் நகராட்சி மார்கெட் இருப்பதால் அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்காக பொதுமக்கள் அதிகம் வருவார்கள். ஏ.டி.சி.யில் இருந்து பஸ் நிலையம் செல்லும் எட்டின்ஸ் சாலையோரத்தில் குதிரை பந்தய மைதானத்ைத ஒட்டி சுமார் 1 கி.மீ. தூர கழிவுநீர் கால்வாய் உள்ளது.

இந்நிலையில் ஏ.டி.சி. பகுதியில் உள்ள நகராட்சி கழிப்பிடங்களில் அதனை டெண்டர் எடுத்துள்ளவர்கள் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட பல மடங்கு அதிக கட்டணம் வசூலிப்பதால் பொதுமக்கள் பலரும் இதனை பயன்படுத்துவதில்லை.

மாறாக இக்கால்வாயில் சிறுநீர் கழிக்கின்றனர். இதனால் இப்பகுதியில் துர்நாற்றம் வீசி சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. திறந்தவெளி கழிப்பிடமாக உள்ளதால் நடந்து செல்லும் பொதுமக்கள் முகம் சுளிக்கின்றனர்.

எனவே இக்கால்வாயை தூர்வாரி தூய்மைபடுத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர். இதேபோல் ஊட்டி ஏடிசி. பார்க்கிங் தளம், விளையாட்டு மைதானம் உள்ளிட்ட இடங்களும் திறந்தவெளி கழிப்பிடமாக மாறி காட்சியளிக்கிறது.

Related Stories: