முதியவர் தூக்கு போட்டு தற்கொலை

பண்ருட்டி, செப். 13: விழுப்புரம் அடுத்துள்ள பொய்யப்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் கதிர்வேலு. இவரது மகன் ஆறுமுகம் (60). இவர் கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்துள்ள மாளிகை மேடு ஏரிப்பாளையத்தில் அவரது மனைவியுடன் வாழ்ந்து வந்தார். இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இந்த நிலையில் இவர் நேற்று வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இவரது சாவில் சந்தேகம் உள்ளதாக இவரது தம்பி சண்முகம் பண்ருட்டி போலீசில் புகார் கொடுத்தார். இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார்.

Related Stories: