ஆசிய கோப்பை பெண்கள் ஹாக்கி: பைனலுக்கு முன்னேறியது சீனா; 4-1 என்ற கோல் கணக்கில் இந்தியாவை வீழ்த்தியது

ஹாங்சோ: சீனாவின் ஹாங்சோ நகரில் ஆசிய கோப்பை பெண்கள் ஹாக்கி போட்டி நடந்து வருகிறது. இந்த தொடாரில் லீக் சுற்று முடிவில் சூப்பர் 4 சுற்றுக்கு இந்தியா, சீனா, தென் கொரியா, ஜப்பான் தகுதி பெற்றது. இந்த சுற்றின் முதல் போட்டியில் 4-2 என்ற கணக்கில் தென் கொரியாவை இந்தியா வீழ்த்தியது. 4 அணிகளும் ஒரு போட்டியில் விளையாடி உள்ள நிலையில் இந்திய மற்றும் சீனா தலா 3 புள்ளிகளுடன் முதல் இடங்களை முறையே பெற்று உள்ளது. தென் கொரியா மற்றும் ஜப்பான் தோல்வியை தழுவியதால் புள்ளிகள் ஏதும் எடுக்காமல் உள்ளன. இந்நிலையில், இந்திய-சீனா இடையே போட்டி நேற்று ஹாங்சோவில் நடந்தது. இதில், சீனா அணியில் மீரோங் 4 நிமிடத்தில் முதல் கோல் அடித்தார். தொடர்ந்து, சென் யாங் 31 நிமிடத்தில் 2வது கோலும், 47 நிமிடத்தில் டான் ஜின்சுவாங் 3வதுகோலும், 56 நிமிடத்தில் மீரோங் 4வது கோலும் அடித்தனர். இந்திய அணியில் மும்தாஸ் கான் 38 நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார். ஆட்ட நேர முடிவில் 1-4 என்ற கணக்கில் இந்தியாவை சீனா வீழ்த்தி பைனலுக்கு தகுதி பெற்றது.

Related Stories: