பிரபல ரவுடி 2பேர் குண்டாசில் கைது

திருத்துறைப்பூண்டி செப்.11: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி குட்ஷெட் தெரு பாலசுப்ரமணியன் மகன் பரத் (வயது28), முத்துப்பேட்டை அருகே உள்ள நாச்சிகுளம் ரயில்வே கேட் ரோடு சாகுல் ஹமீது மகன் ரியாஸ் அகமது (வயது 30) சரித்திர பதிவேடு குற்றவாளியாகிய ஆகிய இருவரும் தொடர்ந்து பல்வேறு வழக்குகளில் ஈடுபட்டு வந்த காரணத்தினால் திருத்துறைப்பூண்டி காவல் நிலைய காவல் ஆய்வாளர் கழனியப்பன் பரிந்துரையின் அடிப்படையில் திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கருண் கரட் நடவடிக்கை மேற்கொண்டதின் அடிப்படையில் பரத், ரியாஸ் அகமது இருவரையும் மாவட்ட கலெக்டர் மோகனச்சந்திரன் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்து அடைக்க உத்தரவிட்டுள்ளார், இதனையடுத்து இருவரும் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

 

Related Stories: