விபத்தில் காயமடைந்த திமுக கிளைச் செயலாளருக்கு விஎஸ்ஆர் ஜெகதீஸ் நிதியுதவி

திசையன்விளை, டிச.18:  ராதாபுரம் ஒன்றியம், உதயத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட வட்டவிளையைச் சேர்ந்தவர் முருகன். திமுக கிளைச் செயலாளரான இவர், கடந்த சில தினங்களுக்கு முன்னர் தனது மனைவி மற்றும் பேத்தியுடன் பைக்கில் சென்றுகொண்டிருந்தார். அப்போது ஏற்பட்ட விபத்தில் இவரும், பேத்தியும் காயமடைந்தனர். இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தகவலறிந்த ராதாபுரம் கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் வி.எஸ்.ஆர். ஜெகதீஸ், விபத்தில் காயமடைந்த முருகனை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியதோடு மருத்துவ செலவுக்கு ரூ.10 ஆயிரம் நிதியுதவி வழங்கினார். அப்போது ராதாபுரம் மேற்கு ஒன்றியச் செயலாளர் ஜோசப் பெல்சி, ராதாபுரம் ஊராட்சி செயலாளர் கோவிந்தராஜ், உறுமன்குளம் ஊராட்சி செயலாளர் அமெச்சியார், முன்னாள் மாவட்டப் பிரதிநிதி ரமேஷ், ராதாபுரம் கணேசன், திசையன்விளை குமார், ஒன்றிய மாணவர் அணி கண்ணன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

Related Stories: