யுஎஸ் ஓபன் டென்னிஸ் ஆடவர் இரட்டையர் இறுதிப் போட்டியில் நேற்று, ஸ்பெயின் வீரர் மார்செல் கிரானோலர்ஸ் புஜோல், அர்ஜென்டினா வீரர் ஹோராசியோ ஜெபாலோஸ் இணை, பிரிட்டனை சேர்ந்த நீல் ஸ்கூப்ஸ்கி, ஜோ சாலிஸ்பரி இணையுடன் மோதியது. இப்போட்டியில் முதல் செட்டை பிரிட்டன் இணை 6-3 என்ற புள்ளிக் கணக்கில் எளிதில் கைப்பற்றியது. 2வது செட்டில் இரு இணையரும் ஈடு கொடுத்து ஆடியதால், புஜோல், ஜெபாலோஸ் இணை, 7-6 (7-4) என்ற புள்ளிக் கணக்கில் டைபிரேக்கரில் வென்றது. கடைசியில் வெற்றியை தீர்மானிக்கும் 3வது செட்டை, அதே இணை 7-5 என்ற புள்ளிக் கணக்கில் போராடி கைப்பற்றியது. அதனால், 2-1 என்ற செட் கணக்கில் வென்ற புஜோல், ஜெபாலோஸ் இணை சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது.
ஆடவர் இரட்டையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்ற புஜோல், ஜெபாலோஸ்
- பூஜோல்
- செபாலோஸ்
- யுஎஸ் ஓபன்
- ஸ்பெயின்
- மார்செல் கிரானோலர்ஸ் புஜோல்
- அர்ஜென்டீனா
- ஹொராசியோ செபாலோஸ்
- பிரிட்டன்
- நீல் ஸ்குப்ஸ்கி
- ஜோ சாலிஸ்பரி
- பிரிட்டன்
