ஆப்கன் நிலநடுக்க பலி 1,400ஆக அதிகரிப்பு

காபூல்: ஆப்கானிஸ்தானின் நங்கர்ஹார் மாநிலத்தை மையமாகக் கொண்டு, பாகிஸ்தான் எல்லையை ஒட்டிய பகுதியில் ஞாயிறன்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 6 புள்ளிகளாக பதிவான இந்த நிலநடுக்கத்தால் நூற்றுக்கணக்கான கிராமங்கள் நிலநடுக்கத்தில் தரைமட்டமாகின.

நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சம்பவங்களில் சிக்கி 1,400க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் மூவாயிரத்துக்கும் அதிகமானோர் படுகாயமடைந்ததாக தலிபான் அரசின் செய்தி தொடர்பாளர் சபிபுல்லா முஜாஹித் தெரிவித்துள்ளார்.

நிலநடுக்கத்தின் காரணமாக பேரழிவிற்குள்ளான மலைப்பகுதி மற்றும் தொலைத்தூர பகுதிகளை குறிப்பிட்ட நேரத்திற்கு அடைய முடியாமல் மீட்புகுழுவினர் போராடி வருகின்றனர். இதனால் உயிரிழப்புக்களின் எண்ணிக்கையானது அதிவேகமாக அதிகரித்து வருகின்றது.

Related Stories: