விர்ரென பாய்ந்த மிர்ரா மிச்செலை வீழ்த்தி அபாரம்

யுஎஸ் ஓபன் மகளிர் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த முதல் சுற்றுப் போட்டியில் ரஷ்ய வீராங்கனை மிர்ரா ஆண்ட்ரீவா (18), அமெரிக்காவின் அலிசியா மிச்செல் பார்க்ஸ் (24) உடன் மோதினார். இப்போட்டியில் துளியும் விட்டுத் தராமல் அபாரமாக ஆடிய ஆண்ட்ரீவா, 6-0, 6-1 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி வாகை சூடினார். அமெரிக்க வீராங்கனை பேடன் ஸ்டியர்ன்ஸ் (23), லாத்வியா வீராங்கனை டர்ஜா செமெனிஸ்டஜா (22) இடையே நடந்த போட்டியில், 7-5, 6-0 என்ற நேர் செட் கணக்கில் பேடன் வென்றார்.

Related Stories: