உயர்கல்வித்துறை சார்பில் ரூ.51 கோடியில் கட்டப்பட்ட கல்விசார் கட்டிடங்கள் திறப்பு

சென்னை: உயர்கல்வித் துறையின் உட்கட்டமைப்புகளை மேம்படுத்திடும் வகையில் அழகப்ப செட்டியார் அரசு பொறியியல் கல்லூரி, அழகப்பா பல்கலைக்கழகம், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் மற்றும் அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரிகள், சென்னை வியாசர்பாடி, டாக்டர் அம்பேத்கர் கலைக் கல்லூரியில் ரூ.5 கோடியே 28 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள 16 கூடுதல் வகுப்பறைகள் மற்றும் இதர கட்டடங்கள் உள்பட மொத்தம் ரூ.51 கோடியே 4 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள உயர்கல்வித்துறை சார்ந்த கட்டிடங்களை தலைமை செயலகத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில், அமைச்சர் எஸ். ரகுபதி, தலைமைச் செயலாளர் நா.முருகானந்தம், உயர்கல்வித் துறை செயலாளர் பொ. சங்கர், தொழில்நுட்பக் கல்வி ஆணையர் ஜெ.இன்னசன்ட் திவ்யா, கல்லூரி கல்வி ஆணையர் எ.சுந்தரவல்லி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர். காணொலிக் காட்சி வாயிலாக திருவாரூர் மாவட்டத்தில் இருந்து அமைச்சர் முனைவர் கோவி.செழியன், எம்.பி. எம்எல்ஏ மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Related Stories: