உடல் நலம் பாதிப்பால் சுப்மன் கில் ஓய்வு

பெங்களூரு: துலீப் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் வரும் 28ம் தேதி பெங்களூருவில் துவங்க உள்ளன. இதில் பங்கேற்கும் அணிகளில் ஒன்றான வடக்கு மண்டலத்துக்கு இந்திய டெஸ்ட் கிரிக்கெட் கேப்டன் சுப்மன் கில், கேப்டனாக உள்ளார். இந்நிலையில், கில் உடல் நிலை சரியில்லாத காரணத்தால் ஓய்வில் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

அதனால், துலீப் கோப்பை போட்டிகளில் கில் ஆடுவது கேள்விக்குறி என கூறப்படுகிறது. வரும் செப். 9ம் தேதி துவங்கவுள்ள ஆசிய கோப்பைக்கான கிரிக்கெட் போட்டியில் ஆடும் இந்திய அணியிலும் கில் இடம்பெற்றுள்ள நிலையில், அவரது உடல் நிலை பாதிப்பு, கிரிக்கெட் ரசிகர்களை கவலை அடையச் செய்துள்ளது.

Related Stories: