லயன்ஸ் கிளப் சார்பில் சாயர்புரம் அருகே மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி

*தலைவர் பண்டாரம் துவக்கி வைத்தார்

ஏரல் : சாயர்புரம் அருகே முள்ளன்விளையில் இருந்து மழைநீர் வடிகால் துவங்கி சாயர்புரம் போப் பள்ளி விளையாட்டு மைதானம் அருகே வழியாக சென்று ஸ்ரீவைகுண்டம் வடகால் வாய்க்காலில் வந்து சேர்கிறது. இந்த வாய்க்கால் செடி, கொடி ஆக்கிரமிப்புகளால் தூர்ந்து போய் உள்ளது.

இதனால் மழைக்காலத்தில் வாய்க்கால் வழியாக தண்ணீர் வடியமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் கடந்த 2023 மழை வெள்ளத்தில் இந்த வடிகால் வாய்க்காலில் தண்ணீர் வடியமுடியாத நிலை ஏற்பட்டதால் தண்ணீர் சுப்பிரமணியபுரம், முள்ளன்விளை, சாயர்புரம், பட்டாண்டிவிளை, நடுவைக்குறிச்சி, புளியநகர் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் ஊருக்குள் புகுந்தது.

இதனால் பொதுமக்கள், வியாபாரிகள் கடுமையாக பாதிக்கப்பட்டதால் வாய்க்காலை தூர்வாரி தர அப்பகுதி மக்கள் கோரிக்கை நீண்ட காலமாக விடுத்து வந்தனர்.

இதையடுத்து சாயர்புரம் பேருராட்சி 14வது வார்டு கவுன்சிலர் ஜெயக்குமார் சாயர்புரம் சிவத்தையாபுரம் லயன்ஸ் கிளப்பிடம் கோரிக்கை வைத்திருந்தார். இதையடுத்து லயன்ஸ் கிளப் சார்பில் நேற்று மழைநீர் வடிகால் ஜேசிபி மூலம் தூர்வாரும் பணி துவக்க விழா நடந்தது. இதில் திமுக மாவட்ட விவசாய தொழிலாளரணி தலைவரும், லயன்ஸ் கிளப் தலைவருமான எஸ்.வி.பி.எஸ்.பண்டாரம் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் செயலாளர் விஜயசிவா, பொருளாளர் பாஸ்கர், மாவட்ட ஆலோசகர் ஆலயமணி, வட்டார தலைவர் அமிர்தராஜ், உப தலைவர்கள் நாகராஜன், அருண், பன்னாட்டு நிதிய ஒருங்கிணைப்பாளர் செல்வபிரகாஷ், லயன்ஸ் கிளப் இயக்குனர் சிரியரங்கநாதன், சாயர்புரம் பேரூராட்சி கவுன்சிலர் ஜெயக்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: