முதல் முறையாக யுஎஸ் ஓபனில் அதிவேக கலப்பு இரட்டையர் டென்னிஸ்: நேற்று தொடங்கியது… இன்று முடிகிறது…

நியூயார்க்: அமெரிக்காவின் நியூயார்க் நகரில் யுஎஸ் ஓபன் கிராண்ட் ஸ்லாம் போட்டி முறைப்படி ஆக.24ம் தேதி தொடங்க உள்ளது. இந்நிலையில் வழக்கத்துக்கு மாறாக தகுதிச் சுற்றுடன் கலப்பு இரட்டையர் ஆட்டங்களும் நேற்று தொடங்கின. வழக்கமாக கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் ஒற்றையர் பிரிவு ஆட்டங்கள் தொடங்கி 2வது, 3வது சுற்று நடைபெறும் போதுதான் கலப்பு இரட்டையர் பிரிவு சுற்று ஆட்டங்கள் தொடங்கும். ஆனால் இந்த முறை யுஎஸ் ஓபனில் முன்னதாகவே கலப்பு இரட்டையர் ஆட்டங்கள் தொடங்கி விட்டன. கூடவே முன்னணி வீரர்கள், வீராங்கனைகள் மட்டுமே இதில் பங்கேற்றுள்ளனர். அத்துடன் வெற்றி புள்ளி 6க்கு பதிலாக 4ஆக குறைக்கப்பட்டு ஆட்டங்கள் நடந்தன. வழக்கமாக காலிறுதிக்கு முன்பு 2சுற்று ஆட்டங்கள் நடைபெறும். இந்த முறை காலிறுதிக்கு முன்பு ஒரு சுற்று ஆட்டம் மட்டும்தான் நடந்தது.

முதல் சுற்றில் நேற்று எம்மா ரெடுகானு(பிரிட்டன்)/கார்லோஸ் அல்கராஸ்(ஸ்பெயின்), ஒல்கா டேனிலோவிச்/நோவக் ஜோகோவிச்(செர்பியா), மேடிசன் கீஸ்/பிரான்சிஸ் டயபோ(அமெரிக்கா), நவோமி ஒசாகா(ஜப்பான்)/கேல் மோன்ஃபில்ஸ்(பிரான்ஸ்), பெலிண்டா பென்சிக்(சுவிட்சர்லாந்து)/அலெக்சாண்டர் ஸ்வெரவ்(ஜெர்மனி), அமண்டா அனிஸ்மோவா(அமெரிக்கா)/ஹோல்கர் ரூனே(டென்மார்க்), வீனஸ் வில்லியம்ஸ்்/ரியல்லி ஒபெல்கா(அமெரிக்கா), எலனா ரைபாகினா(கஜகஸ்தான்)/டெய்லர் ஃபிரிட்ஸ்(அமெரிக்கா) ஆகிய இணைகள் காலிறுதிக்கு முந்தைய முதல் சுற்றுடன் மூட்டைக்கட்டின.

இவர்களை வீழ்த்திய மிரா ஆண்ட்ரீவா/டானில் மெத்வதேவ்(ரஷ்யா), கேத்தி மெக்நல்லி(அமெரிக்கா)/லாரன்சோ முசெட்டி(இத்தாலி), டெய்லர் டவுன்செண்ட்/பென் ஷெல்டன்(அமெரிக்கா), கரோலினா முகோவா(செக் குடியரசு)/ஆந்த்ரே ரூபலேவ்(ரஷ்யா) ஆகிய இணைகளும் காலிறுதியுடன் நடையை கட்டின. அதனை தொடர்ந்து இன்று அரையிறுதி, இறுதி ஆட்டங்கள் நடைபெற உள்ளன. முதல் அரையிறுதியில் ஜெசிகா பெகுலா(அமெரிக்கா)/ஜாக் டிராபர்(பிரிட்டன்) – இகா ஸ்வியாடெக்(போ லாந்து)/கஸ்பர் ரூட் (நார்வே) ஆகிய இணைகள் களம் காண உள்ளன. தொடர்ந்து நடைபெறும் 2வது அரையிறுதியில் டேனியலி கொலின்ஸ்/கிறிஸ்டியன் ஹாரிசன்(அமெரிக்கா), தொடர்ந்து நடைபெறும் 2வது அரையிறுதியில் டேனியலி கொலின்ஸ்/கிறிஸ்டியன் ஹாரிசன்(அமெரிக்கா), சாரா இர்ரனி/ஆந்த்ரே வவாஸ்சோரி(இத்தாலி) இணைகள் மோத உள்ளன.

* ஒரு ஆட்டம்
காலிறுதி ஆட்டம் ஒன்றில் ஜெசிகா பெகுலா(அமெரிக்கா)/ஜாக் டிராபர்(பிரிட்டன்) இணையுடன், மிரா ஆண்ட்ரீவா/டானில் மெத்வதேவ்(ரஷ்யா) இணை மோதியது. அதில் பெகுலா இணை வெறும் 36நிமிடங்களில் 4-1, 4-1 என்ற நேர் செட்களில் வென்று அரையிறுதிக்கு முன்னேறியது.

Related Stories: