தா.பேட்டை, ஆக.20: தா.பேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் தழுவிய ஒரு மணி நேரம் வெளிநடப்பு செய்து கருப்பு பேட்ச் அணிந்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஊராட்சி ஒன்றிய ஆணையர் அந்தோணிதாஸ் தலைமையில் சுமார் 40க்கும் மேற்பட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர். அப்போது உங்களுடன் ஸ்டாலின் முகாமிற்கு தமிழக அரசு நிதி ஒதுக்கீடு வழங்க வேண்டும், உங்களுடன் ஸ்டாலின் முகாமிற்கு நெருக்கடி கொடுக்க கூடாது,
முகாம் நடத்த நிதி ஒதுக்கீடு செய்யாமல் திருமண மண்டபம், வாடகை பந்தல் அமைப்பது, மைக்செட் வாடகை, மேஜை நாற்காலி வாடகை அளிக்க ஊராட்சி செயலர் முதல் ஒன்றிய ஆணையர் வரை கடுமையான நெருக்கடிக்கு உள்ளாவது நியாயம் தானா, உங்களுடன் ஸ்டாலின் ஒரு முகாமிற்கும் இன்னொரு முகாமிற்கும் இடையில் கால அவகாசம் வழங்க வேண்டும், ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்களின் நியாயமான கோரிக்கைகளை உடனடியாக தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அலுவலர்கள் கோஷங்கள் எழுப்பினர்.
