சின்கியுபீல்ட் செஸ் பிரக்ஞானந்தாவிடம் சரணடைந்த குகேஷ்

மிசோரி: அமெரிக்காவின் செயின்ட் லூயிஸ் நகரில் நடந்து வரும் சின்கியுபீல்ட் கோப்பைக்கான செஸ் போட்டியின் முதல் சுற்றில் இந்தியாவை சேர்ந்த உலக சாம்பியன் குகேஷை சக இந்திய வீரர் பிரக்ஞானந்தா வெற்றி கண்டார். அமெரிக்காவின் மிசோரி மாகாணத்தில் உள்ள செயின்ட் லூயிஸ் நகரில் சின்கியுபீல்ட் கோப்பைக்கான செஸ் போட்டிகள் நடந்து வருகின்றன. முதல் சுற்றுப் போட்டியில் வெள்ளைக் காய்களுடன் ஆடிய தமிழகத்தை சேர்ந்த இந்திய கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா, சக இந்திய வீரரும் உலக சாம்பியனுமான குகேஷ் உடன் மோதினார்.

துவக்கம் முதல் ஆதிக்கம் செலுத்திய பிரக்ஞானந்தா, 36வது நகர்த்தலில், குகேஷை வெற்றி கண்டார். நேற்று நடந்த மற்றொரு முதல் சுற்றுப் போட்டியில் உஸ்பெகிஸ்தான் வீரர் நோடிர்பெக் அப்துஸட்டோரோவை, அமெரிக்க வீரர் லெவோன் ஆரோனியன் வென்றார். இதையடுத்து, 2வது சுற்றில், குகேஷ்- அப்துஸட்டோரோ மோதவுள்ளனர். மற்றொரு 2வது சுற்றுப் போட்டியில் அமெரிக்க வீரர் பேபியானோ கரவுனாவை பிரக்ஞானந்தா எதிர்கொள்ள உள்ளார்.

Related Stories: