ஒருங்கிணைந்த தொழில்நுட்ப தேர்வு

செங்கல்பட்டு, ஆக.18: தமிழ்நாடு ஒருங்கிணைந்த தொழில்நுட்பத்தேர்வு செங்கல்பட்டு மாவட்டத்தில் 8 மையத்தில் நடைபெற்றது. செங்கல்பட்டு மாவட்டத்தில் 8 மையங்களில் தமிழ்நாடு ஒருங்கிணைந்த தொழில்நுட்பத்தேர்வு நடைபெற்றது. இத்தேர்விற்கு 2010பேர் ஆண்கள் பெண்கள் என விண்ணப்பித்திருந்தனர். ஆனால், ேநற்று நடந்த தேர்வில் 932 பேர் மட்டுமே தேர்வு எழுதினர். 1078 பேர் தேர்வு எழுத வரவில்லை.

தமிழ்நாடு ஆசிரியர் தகுதித்தேர்வு அதனையடுத்து ஒருங்கிணைந்த குடிமை பணிகள் தேர்வில் குரூப் 1மற்றும் 2மற்றும் மூன்று பிரிவுகளாக நடைபெறுவது வழக்கம். அதேபோன்று தமிழ்நாடு ஒருங்கிணைந்த தொழில்நுட்ப தேர்வும் நடைபெற்று வருகிறது. இந்த தேர்வில் விண்ணப்பித்த அனைவரும் தேர்வு எழுதவில்லை. இதில் 40 சதவீத பேர்தான் தேர்வு எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது. இதேபோல், காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல்வேறு மையங்களில் ஒருங்கிணைந்த தொழில்நுட்ப தேர்வு நடைபெற்றது.

 

Related Stories: