நத்தம் அருகே ஆண்கள் ஸ்பெஷல் விழாவில் அசத்தல் கிடாய் கறி விருந்து

நத்தம், ஆக. 13: நத்தம் அருகே நடுவனூர் கோயில் ஆடி படையல் திருவிழாவில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்களுக்கு கிடாய் கறி விருந்து பரிமாறி அசத்தினர். நத்தம் அருகே நடுவனூரில் உள்ள கருப்பசாமி கோயிலில் ஆண்கள் மட்டுமே பங்கேற்ற ஆடி படையல் திருவிழா நேற்று முன்தினம் இரவு நடந்தது. முன்னதாக பக்தர்களாங் நேர்த்திக்கடனாக விடப்பட்ட 25க்கும் மேற்பட்ட ஆட்டு கிடாக்கள் பலியிடப்பட்டு, 30 சிப்பம் அரிசியில் அசத்தலான கறி விருந்து தயார் செய்யப்பட்டது.

தொடர்ந்து கருப்பசாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனைகள் நடந்தன. பின்னர் சுவாமிக்கு கறிவிருந்து படையலிடப்பட்டது. பின்னர் கோயிலுக்கு வந்த பக்தர்களுக்கு கறிவிருந்து பரிமாறப்பட்டது. இதில் நடுவனூர், பண்ணியாமலை, ஆவிச்சிப்பட்டி, மஞ்சநாயக்கன்பட்டி உள்ளிட்ட 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை நடுவனூர் கிராமமக்கள் செய்திருந்தனர்.

 

Related Stories: