தா.பழூர், ஆக. 11: அரியலூர் மாவட்டம் தா.பழூர் சுற்று வட்டார பகுதிகளான இடங்கண்ணி, தென்கச்சி பெருமாள் நத்தம், மேலகுடிகாடு, கீழகுடிகாடு ,அண்ணக்காரன் பேட்டை, அணைகுடம், சோழமாதேவி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் திடீரென கருமேகம் சூழ்ந்து மிதமான மழை பெய்து வருவதால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வந்த நிலையில் தற்போது பெய்து வரும் மிதமான மழையால் குளிர்ந்த காற்று வீசுகிறது. இந்த திடீர் மழையானது சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக பெய்தது. இதன் காரணமாக தற்போது கடலை சாகுபடி செய்துள்ள விவசாயிகளுக்கு இந்த மழை ஒரு வரப்பிரசாதமாக உள்ளது.இந்த மழையால் பொதுமக்கள் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
