வந்தவாசி, ஆக. 9: வந்தவாசி டவுன் ஒரு பகுதியைச் சேர்ந்தவரின் மனைவி. இவர் நேற்று தனது வீட்டில் இருந்தபோது அதே பகுதியைச் சேர்ந்த ஜானகிராமன் மகன் விஷ்ணு (24) என்பவர் திடீரென வீட்டினுள் புகுந்து அந்த பெண்ணை கையைப் பிடித்து இழுத்து அத்துமீறியுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த பெண் கூச்சலிட்டு வீட்டின் வெளியே தள்ளி கதவை சாத்தனாராம். சம்பவம் குறித்து தனது கணவருக்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்துள்ளார். அப்போது கதவை திறக்காவிட்டால் உன் கணவரையும் குழந்தையும் கொலை செய்து விடுவேன் என வாலிபர் மிரட்டியதாக கூறப்படுகிறது. இது குறித்து அந்த பெண் வந்தவாசி தெற்கு போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் சப் இன்ஸ்பெக்டர் விநாயகமூர்த்தி வழக்குப்பதிவு செய்து விஷ்ணுவை கைது செய்தார்.
