தண்டராம்பட்டு, ஆக.7: தண்டராம்பட்டு அருகே ரூ.60 கோடியில் 4 வழிச்சாலை அமைக்கும் பணியை நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நேற்று ஆய்வு செய்தனர். தண்டராம்பட்டு நெடுஞ்சாலைத்துறைக்கு உட்பட்ட திருவண்ணாமலை- அரூர் (வழி) தானிப்பாடி சாலையில் ரூ.60 கோடி மதிப்பில் முதலமைச்சர் சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 4 வழிச்சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது. இப்பணியை திருவண்ணாமலை நெடுஞ்சாலைத்துறை (கட்டுமானம் மற்றும் பராமரிப்பு) திருவண்ணாமலை வட்ட கண்காணிப்பு பொறியாளர் முரளி நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, சாலையின் தரம் குறித்து ஆய்வு செய்து பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என கூறினார். ஆய்வின்போது, உதவி கோட்டப் பொறியாளர் எபினேசர் அன்புராஜ், உதவி பொறியாளர் புகழேந்தி மற்றும் சாலை ஆய்வாளர்கள் உடனிருந்தனர்.
ரூ.60 கோடியில் 4 வழிச்சாலை அமைக்கும் பணி நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஆய்வு தண்டராம்பட்டு அருகே
- நெடுஞ்சாலைகள் துறை
- தந்தரம்பட்டு
- திருவண்ணாமலை-அரூர் (வை) தானிப்பாடி சாலை
- தண்டராம்பட்டு நெடுஞ்சாலைத் துறை
- முரளி
- திருவண்ணாமலை வட்டம்
- கண்காணிப்பு பொறியாளர்
- திருவண்ணாமலை நெடுஞ்சாலைத் துறை
- கட்டுமானம் மற்றும் பராமரிப்பு
