பெருந்துறையில் அ.தி.மு.க., செயல்வீரர்கள் கூட்டம்

ஈரோடு, டிச. 4:  பெருந்துறை  சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சென்னிமலை ஒன்றியம் ஈங்கூர் ஊராட்சி மற்றும்  பனியம்பள்ளி ஊராட்சியில் தேர்தல் பணி தொடர்பான அ.தி.மு.க., செயல் வீரர்கள்  ஆலோசனை கூட்டம் நேற்றுமுன்தினம் பெருந்துறையில் நடந்தது. இக்கூட்டத்திற்கு முன்னாள்  ஊராட்சிக்குழு துணை தலைவர் மணிமேகலை தலைமை தாங்கினார். முன்னாள்  அமைச்சரும், பெருந்துறை எம்.எல்.ஏ.,வுமான தோப்பு வெங்கடாச்சலம் கலந்துகொண்டு பேசியதாவது: தமிழகத்தில் தொடர்ந்து 3வது  முறையாக அதிமுக., ஆட்சி தொடரவும், பெருந்துறை தொகுதி அ.தி.மு.க.,வின் கோட்டை  என்பதை நிரூபிக்கும் வகையில், அனைத்து நிர்வாகிகளும் ஒன்றினைந்து பாடுபட  வேண்டும், அந்தந்த பகுதிகளில் உள்ள நிர்வாகிகள் மக்களை சந்தித்து  அவர்களின் குறைகளை கேட்டறிந்து உடனடியாக தீர்வு காண நடவடிக்கை எடுக்க  வேண்டும். மேலும் வாக்காளர் பெயர் சேர்த்தல், நீக்கல் பணிகளில் கவனம் செலுத்த  வேண்டும். இவ்வாறு தோப்புவெங்கடாச்சலம் பேசினார்.  இக்கூட்டத்தில் ஊராட்சி  ஒன்றிய உறுப்பினர் ரத்தினம் மணி, பள்ளி தாளாளர் ஈஸ்வரமூர்த்தி, முன்னாள்  தலைவர் பாலசுப்பிரமணி, அர்ச்சுணன், விஸ்வநாதன், புஷ்பநாதன், சதாசிவம்,  மூர்த்தி, நந்தகுமார் மற்றும் கிளை செயலாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து  கொண்டனர்.

Related Stories:

>