,965 பயனாளிகளுக்கு ₹22.50லட்சம் நலத்திட்ட உதவி மக்களுக்கான திட்டங்களை செயல்படுத்துகிறார் முதல்வர்

தூத்துக்குடி, மே 7: மக்களுக்கான திட்டங்களை செயல்படுத்துகிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின் என தூத்துக்குடியில் நடந்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சி பொறுப்பேற்று இரு ஆண்டுகள் நிறைவடைந்ததை யொட்டி தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. விழாவிற்கு, மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தலைமை வகித்தார். மீன்வளம், மீனவர்நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கலந்துகொண்டு 2,965 பயனாளிகளுக்கு ₹22.50 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசியதாவது: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றவுடன் கொரோனா பாதிக்கப்பட்ட மக்களை காக்கும் வகையில் ஒவ்வொரு குடும்ப அட்டைதாரர்களுக்கும் தலா ₹2000என இரண்டு தவணைகளாக மொத்தம் ₹4000 வழங்கினார். நகரப்பேருந்துகளில் மகளிருக்கு இலவச பயண திட்டத்தினை வழங்கி தாய்மார்களை காக்கும் முதலமைச்சராக உள்ளார். கூட்டுறவு கடன் சங்கத்திலுள்ள கடன்கள், விவசாயகடன், 5பவுன் நகைக்கடன் ஆகியவற்றையும் தள்ளுபடி செய்தார்.

அரசுப்பள்ளிகளில் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை படித்துவிட்டு கல்லூரியில் சேரும் மாணவிகளுக்கு மாதம்தோறும் ₹1000 வழங்குகின்ற புதுமைப்பெண் திட்டத்தை தந்திருக்கிறார். இல்லம் தேடி கல்வி, நான் முதல்வன், மக்களை தேடி மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறார். தமிழ்நாடு முதலமைச்சர் இரண்டாண்டு சாதனை ஆட்சி முடித்து மூன்றாவது ஆண்டினை தொடங்குகிறார். மக்கள் சக்தியான நீங்கள் என்றென்றும் அவருக்கு ஆதரவு தர வேண்டும்’ என்றார்.

முன்னதாக அவர், சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் ₹4.68லட்சம் மதிப்பில் 468பேருக்கு முதியோர் உதவித்தொகை பெறுவதற்கான ஆணை, ₹3.73லட்சம் மதிப்பில் 373பேருக்கு விதவை உதவித்தொகை பெறுவதற்கான ஆணை, ₹8.58லட்சம் மதிப்பில் 572பேருக்கு மாற்றுத்திறனாளி உதவித்தொகை பெறுவதற்கான ஆணை, ₹25000 மதிப்பில் 25பேருக்கு கணவரால் கைவிடப்பட்டோர் உதவித்தொகை பெறுவதற்கான ஆணையும், ₹8000 மதிப்பில் 8பேருக்கு முதிர்கன்னி உதவித்தொகை பெறுவதற்கான ஆணையும் என மொத்தம் 2,965 பேருக்கு ₹22,38,254மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இதில், எம்.எல்.ஏக்கள் சண்முகையா(ஓட்டப்பிடாரம்), மார்க்கண்டேயன் (விளாத்திகுளம்), மாநகராட்சி மேயர் ஜெகன்பெரியசாமி, மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பிரம்மசக்தி, கூடுதல் கலெக்டர்(வளர்ச்சி) தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ், மாவட்ட வருவாய் அலுவலர் அஜய்சீனிவாசன், சப்-கலெக்டர் கௌரவ்குமார், ஆவின் தலைவர் சுரேஷ்குமார், தூத்துக்குடி சேர்மன் வசுமதிஅம்பாசங்கர், மாநில திமுக வர்த்தக அணி துணை அமைப்பாளர் உமரிசங்கர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

The post ,965 பயனாளிகளுக்கு ₹22.50லட்சம் நலத்திட்ட உதவி மக்களுக்கான திட்டங்களை செயல்படுத்துகிறார் முதல்வர் appeared first on Dinakaran.

Related Stories: