8 வருடங்களுக்கு மேலாக மகளுக்கு பாலியல் தொல்லை போக்சோவில் தந்தை கைது: உடந்தையான தாயும் சிறையில் அடைப்பு

பெரம்பூர்: பெரவள்ளூர் பகுதியை சேர்ந்த 20 வயது இளம்பெண் ஒருவர், செம்பியம் உதவி கமிஷனர் செம்பேடு பாபுவிடம் புகார் மனு ஒன்றை அளித்தார். அதில், தனது 12 வயது முதல் தனது தந்தை தன்னிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாகவும், இதனை எனது அம்மாவிடம் கூறியபோது, அவர் வெளியே செல்லக்கூடாது என மிரட்டினார். எனவே எனக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தை மீதும், அவருக்கு உறுதுணையாக இருந்த தாய் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என தெரிவித்து இருந்தார்.இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க உதவி கமிஷனர் செம்பேடு பாபு செம்பியம் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் அம்பிகாவுக்கு உத்தரவிட்டார். அதன்பேரில், இளம்பெண்ணின் தந்தையான பெரவள்ளூரை சேர்ந்த ஸ்ரீநாத் (59), மற்றும் அவரது மனைவி காஞ்சனா (52) ஆகிய இருவரிடமும் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதில், தந்தை ஸ்ரீநாத் சிறுவயதில் மகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதும், அதை அவரது மனைவி காஞ்சனா கண்டித்ததும் தெரிய வந்தது.ஆனால், போலீசாரிடம் இதுகுறித்து எதுவும் காஞ்சனா தெரிவிக்கவில்லை. இதனால், தொடர்ந்து ஸ்ரீநாத் தனது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். தந்தையில் செயலால் மனமுடைந்த இளம்பெண் காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததும் தெரியவந்தது. இதையடுத்து ஸ்ரீநாத் மற்றும் அவரது மனைவி காஞ்சனா ஆகியோர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார் நேற்று  இருவரையும் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்….

The post 8 வருடங்களுக்கு மேலாக மகளுக்கு பாலியல் தொல்லை போக்சோவில் தந்தை கைது: உடந்தையான தாயும் சிறையில் அடைப்பு appeared first on Dinakaran.

Related Stories: