6 மாநிலங்களில் காலியாக உள்ள 7 எம்எல்ஏ தொகுதியில் இன்று இடைத்தேர்தல்: இந்தியா கூட்டணிக்கு முதல் டெஸ்ட்

புதுடெல்லி: நாடு முழுவதும் 6 மாநிலங்களில் காலியாக உள்ள 7 சட்டப்பேரவை தொகுதிகளில் இன்று இடைத்தேர்தல் நடக்கிறது. இது இந்தியா கூட்டணிக்கு முதல் டெஸ்ட்டாக எதிர்பார்க்கப்படுகிறது. நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு ஒன்றிய பா.ஜ அரசை வீழ்த்த காங்கிரஸ், திமுக, உள்ளிட்ட 28 கட்சிகள் ஒன்றிணைந்துள்ளன. இந்த நிலையில் 6 மாநிலங்களில் காலியாக உள்ள 7 சட்டப்பேரவை தொகுதிகளில் இன்று இடைத்தேர்தல் நடக்கிறது. இதில் உத்தரபிரதேசத்தில் கோசி தொகுதி, திரிபுராவில் உள்ள தன்பூர், போக்ஸாநகர், ஜார்கண்டின் டும்ரி, உத்தரகாண்டின் பாகேஷ்வர் ஆகிய தொகுதிகளில் இந்தியா கூட்டணி சார்பில் பொதுவேட்பாளர் நிறுத்தப்பட்டுள்ளனர்.

அதே சமயம் மேற்கு வங்கத்தில் உள்ள துப்குரியிலும், கேரளாவின் புதுப்பள்ளி தொகுதியில் இந்தியா கூட்டணியில் உள்ள வேட்பாளர்களை எதிர்த்து, போட்டி வேட்பாளர்களை மற்ற கட்சியினர் நிறுத்தி உள்ளனர். இந்த தொகுதிகளில் செப்டம்பர் 8ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. சோதனை அடிப்படையில் இந்தியா கூட்டணி கட்சிகள் பா.ஜவுக்கு எதிராக 5 தொகுதிகளில் ஒரே ஒரு வேட்பாளரை மட்டும் நிறுத்தி உள்ளதால் இந்த தேர்தல் மிகவும் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

The post 6 மாநிலங்களில் காலியாக உள்ள 7 எம்எல்ஏ தொகுதியில் இன்று இடைத்தேர்தல்: இந்தியா கூட்டணிக்கு முதல் டெஸ்ட் appeared first on Dinakaran.

Related Stories: