கோவை ஏர்போர்ட்டில் 35 டிரோன்கள் பறிமுதல்

கோவை: சிங்கப்பூரில் இருந்து நேற்று முன்தினம் விமானம் ஒன்று கோவை விமான நிலையத்துக்கு வந்தது. அதில் 2 பயணிகளின் உடைமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தபோது, அதற்குள் உரிய ஆவணங்கள் இன்றி நவீன ரக டிரோன்கள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து 2 பயணிகளை பிடித்து அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

அதில், அவர்கள் சங்கர்குரு சுப்ரமணியம் மற்றும் ஜஹீர் ஹூசியான் என்பதும், அவர்கள் கொண்டு வந்த பைகளில் சீனா தயாரிப்பான 35 டிரோன்கள் இருந்ததும் தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ.35 லட்சம். அவர்களிடம் அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

The post கோவை ஏர்போர்ட்டில் 35 டிரோன்கள் பறிமுதல் appeared first on Dinakaran.

Related Stories: