பாரிஸ் ஒலிம்பிக்கில் துப்பாக்கி சுடுதலில் 2வது பதக்கம் கிடைக்குமா?

பாரிஸ்: பாரிஸ் ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகள் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் 3வது நாளான நேற்று ஜப்பான் 3 தங்கம், 2 வெள்ளி பதக்கம் வென்றது. ஆஸ்திரேலியா ஒரு தங்கம், அமெரிக்கா 2 தங்கம், 4 வெள்ளி, ஒரு வெண்கலம் என 7 பதக்கம் அள்ளியது. பிரான்சுக்கு 2 தங்கம், ஒரு வெள்ளி, ஒரு வெண்கலம் கிடைத்தது. துப்பாக்கி சுடுதலில் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் இந்தியாவின் 22 வயதான மனுபாக்கர் 3வது இடம் பிடித்து வெண்கலம் வென்றார். இதன் மூலம் பதக்க பட்டியலில் இந்தியா இடம் பிடித்தது. மகளிர் குத்துச்சண்டை 50 கிலோ எடைப் பிரிவில் இந்திய வீராங்கனை நிகாத் ஜரீன் முதல் சுற்றில் ஜெர்மனி வீராங்கனை மேக்ஸி கரீனா குளோயட்சை வென்று ரவுன்ட் 16 சுற்றுக்குள் நுழைந்தார். வரும் 1ம் தேதி ரவுன்ட் 16 சுற்றில் சீனாவின் வூ யுயுடன் மோத உள்ளார்.

மகளிர் டேபிள் டென்னிஸ் ஒற்றையர் பிரிவில் மணிகா பத்ரா, பேட்மிண்டனில் எச்.எஸ் பிரனாய் ஆகியோர் 2வது சுற்றுக்குள் நுழைந்தனர். நீச்சல் போட்டியில் தகுதி சுற்றுகளில், ஹரி நடராஜ், தினிதி தேசிங்கு தோல்வியடைந்தனர். 4வதுநாளாக இன்று இந்தியா 2 பதக்க போட்டியில் களம் இறங்குகிறது. இன்று மதியம் துப்பாக்கி சுடுதலில் பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் இறுதி போட்டியில் ரமிதா ஜிண்டால் களம் இறங்குகிறார். ஆடவர் ஏர் ரைபிள் பிரிவில் அர்ஜூன் பபுதா மாலை 3.30 மணிக்கு அவர் இறுதிச்சுற்றில் களம் காண்கிறார். இவை தவிர ஆடவர் ஹாக்கியில் இன்று மாலை 4.15 மணிக்கு பி பிரிவில் அர்ஜென்டினாவுடன் இந்தியா மோதுகிறது. வில்வித்தையில் மாலை 6.31 மணிக்கு ஆண்கள் பிரிவில் கால்இறுதியில் தருண்தீப்ராய், தீரஜ் பொம்தேவரா, பிரவீன்ஜாதவ் பங்கேற்கின்றனர். டேபிள் டென்னிசில் 2வது சுற்றில் ஜாஅகுலா, சிங்கப்பூரின் ஜெங் ஜியானுடன் இரவு 11.30 மணிக்கு மோதுகிறார்.

 

The post பாரிஸ் ஒலிம்பிக்கில் துப்பாக்கி சுடுதலில் 2வது பதக்கம் கிடைக்குமா? appeared first on Dinakaran.

Related Stories: