வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் 2ம் நாள் ஆட்டநேர முடிவில் இந்தியா 308 ரன்கள் முன்னிலையில் உள்ளது. சென்னையில் நடைபெற்று வரும் போட்டியில் வங்கதேச அணியைவிட இந்திய அணி 308 ரன்கள் முன்னிலை. முதல் இன்னிங்சில் இந்திய அணி 376 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. வங்கதேச அணி முதல் இன்னிங்சில் 149 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.