சட்டீஸ்கரில் பரபரப்பு சட்டசபையை நோக்கி 29 பேர் நிர்வாண பேரணி: பெண்கள் அலறி அடித்து ஓட்டம்

ராய்ப்பூர்: சட்டீஸ்கர் சட்டப்பேரவையை நோக்கி 29 பேர் நிர்வாணமாக பேரணி சென்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சட்டீஸ்கர் மாநிலத்தில் அரசுப் பணி நியமனத்தில் எஸ்.சி.எஸ்.டி., பிரிவினருக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. இதனைப் பயன்படுத்தி போலியாக எஸ்.சி. எஸ்.டி., சாதி சான்றிதழ் பெற்று 267 பேர் அரசுப் பணி நியமனம் பெற்றதாகப் புகார் எழுந்தது. இதனால் பாதிக்கப்பட்ட எஸ்.சி., எஸ்.டி. பிரிவைச் சேர்ந்த சிலர் பலமுறை புகார் மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லாததால் விரக்தி அடைந்தனர். இந்நிலையில் சட்டீஸ்கர் மாநிலச் சட்டசபை மழைக்கால கூட்டத்தொடர் நேற்று துவங்கியது.

இதையறிந்த பாதிக்கப்பட்ட 29 க்கும் மேற்பட்டோர் அரசின் கவனத்தை ஈர்ப்பதாகக் கூறி சட்டசபை நோக்கி நிர்வாண ஓட்டம் நடத்தினர். இதைப்பார்த்த பெண்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர். இதன் புகைப்படம், வீடியோ சமூக வலைத்தளங்களில் வரலாகப் பரவியது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் அவர்களைத் தடுத்து நிறுத்தி 9 பேரை போலீஸார் கைது செய்தனர். அவர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவுகள் 146 (கலவரம்), 294 (ஆபாசமான செயல்கள் மற்றும் பாடல்கள்) மற்றும் 353, தகவல் தொழில்நுட்ப (ஐடி) விதிகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

The post சட்டீஸ்கரில் பரபரப்பு சட்டசபையை நோக்கி 29 பேர் நிர்வாண பேரணி: பெண்கள் அலறி அடித்து ஓட்டம் appeared first on Dinakaran.

Related Stories: