மேலும் ஒரு பாலம் இடிந்தது: தேஜஸ்வி குற்றச்சாட்டு

பாட்னா: பீகாரில் மேலும் ஒரு பாலம் இடிந்து விழுந்துள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் தேஜஸ்வி யாதவ் குற்றம் சாட்டியுள்ளார். பீகாரில் ஐக்கிய ஜனதா தளம்-பாஜ கூட்டணி ஆட்சி நடக்கிறது. கடந்த சில வாரங்களாக மாநிலத்தில் பாலம் இடிந்து விழும் சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகின்றன. 12க்கும் மேற்பட்ட பாலங்கள் இடிந்து விழுந்துள்ளதால் பீகார் அரசை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன. மீண்டும் மீண்டும் பாலங்கள் இடிந்து விழுந்ததையடுத்து மாநில அரசு 15 பொறியாளர்களை சஸ்பெண்ட் செய்துள்ளது.

இந்நிலையில், ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி நேற்று டிவிட்டரில் பதிவிடுகையில் கிழக்கு சம்பரானில் ஒரு பாலம் இடிந்து விழுந்தது என்று குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பான வீடியோவையும் அவர் பகிர்ந்துள்ளார்.ஆனால் மாவட்ட கலெக்டர் சவுரப் ஜோர்வால்,‘‘ இடிந்து விழுந்தது பாலம் அல்ல.லோகர்காவ்ன் என்ற கிராமத்தில் கழிவு நீர் கால்வாயை கடப்பதற்காக மண்ணால் ஆன தற்காலிக அமைப்பு ஒன்று ஏற்படுத்தப்பட்டுள்ளது. அந்த பகுதியில் பலத்த மழை பெய்ததில் அந்த பாலம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டுள்ளது. எனினும் இது குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது’’ என்றார்.

The post மேலும் ஒரு பாலம் இடிந்தது: தேஜஸ்வி குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Related Stories: