மும்பை நகரில் வெள்ளப்பெருக்கு: பள்ளி, கல்லூரிகளுக்கு அரைநாள் விடுமுறை அறிவிப்பு

மும்பை: மும்பை நகரில் தொடர் கனமழை காரணமாக பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மும்பையில் சாலைகள், தண்டவாளங்கள், குடியிருப்புகளில் மழை நீர் தேங்கியுள்ளது. மும்பை நகரில் 6 மணி நேரத்தில் 30 செ.மீ. மழை கொட்டித் தீர்த்தது. மும்பையில் பல இடங்களில் நள்ளிரவு 1 மணி முதல் 7 மணி வரை 30 செ.மீ. மழை பெய்துள்ளது. கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக மும்பையில் பள்ளி, கல்லூரிகளுக்கு அரைநாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மும்பையில் பல ரயில் நிலையங்களில் தண்ணீர் தேங்கியுள்ளதால் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. புனே – மும்பை வழித்தடத்தில் மழை வெள்ளத்தால் ரயில்சேவை ரத்துசெய்யப்பட்டுள்ளது. மும்பை கிங்ஸ் சர்க்கிள் சர்க்கிள், சயான், பந்தூப் உள்ளிட்ட பல இடங்களில் மழை நீர் தேங்கியுள்ளது. மும்பையில் பல இடங்களில் சாலைகளில் வெள்ளம் தேங்கியுள்ளதால் பேருந்துகள் மாற்றுப்பாதையில் இயக்கப்பட்டு வருகின்றன. மும்பை எல்பிஎஸ் சாலை, வினோபா பவே, தஹசார் சுரங்கப்பாதை, காந்தி மார்க்கெட், அந்தேரி சுரங்கப்பாதையில் மழை வெள்ளம் ஏற்பட்டது.

திலக் சாலை, மலாட் சாய்நாத் சுரங்கப்பாதை, சிவ்சுருஷ்டி, குர்லா, வாடாலா, கிழக்கு போரிவலி சாலைகளில் மழை நீர் தேங்கியுள்ளது. கவுதம் நகர், ஷெல் காலனி பகுதிகளில் மழை நீர் தேங்கியுள்ளதால் அரசு பேருந்துகள் மாற்றுப்பாதையில் இயக்கப்பட்டு வருகின்றன. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

The post மும்பை நகரில் வெள்ளப்பெருக்கு: பள்ளி, கல்லூரிகளுக்கு அரைநாள் விடுமுறை அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: