சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாத திட்டங்கள் அறிய 28 பெண் கவுன்சிலர்கள் ஆந்திரா பயணம்

திருச்சி: ஆந்திர மாநிலம் சித்திபெட் நகரத்தில் குப்பையில்லா நகரமாக மாற்றும் நோக்கில் குப்பைகளை சரியான முறையில் கையாளுவதற்கும் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாத வகையில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. இதனை திருச்சி மாநகராட்சியில் செயல்படுத்தும் வகையில் கவுன்சிலர்கள் நேரடியாக அங்கு சென்று தெரிந்து கொள்ளும் வகையில் அமைச்சர் கே.என்.நேரு ஏற்பாடு செய்தார்.
அதன்படி திருச்சி மாநகராட்சி மற்றும் சாஹஸ் என்ற தொண்டு நிறுவனத்துடன் இணைந்து திருச்சி மாநகராட்சியில் முதல்கட்டமாக துணை மேயர் திவ்யா உள்பட 28 பெண் கவுன்சிலர்கள் ஆந்திரா மாநிலம் சித்திபெட் நகரத்திற்கு சுற்றுப்பயணம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் பெண் கவுன்சிலர்கள் இன்று ஆந்திரா புறப்பட்டனர். இதற்காக துணை மேயர் திவ்யா தலைமையில் 28 கவுன்சிலர்களும் காலை 9 மணிக்கு திருச்சி விமான நிலையத்துக்கு வந்தனர். பின்னர் அங்கிருந்து 9 மணிக்கு விமானத்தில் சென்றனர். இவர்கள் நாளை(13ம் தேதி), நாளை மறுநாள்(14ம் தேதி) சித்திபெட் நகரத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆய்வு செய்ய உள்ளனர். சித்திப்பெட்டில் குப்பைகளை உருவாகும் இடத்திலேயே பிரித்து வாங்குதல் மற்றும் மக்கும் குப்பைகளை வீட்டிலேயே உரமாக மாற்றுதல். ஒவ்வொரு வார்டிலும் மறுஉபயோகம் செய்யக்கூடிய பாத்திரங்களின் வங்கியை செயல்படுத்துதல் மற்றும் குழந்தைகளுக்கு மென்சுரல் கப்கள், துணி நாப்கின்கள் பயன்படுத்துவதை ஊக்குவிப்பதன் மூலம் பிளாஸ்டிக் குப்பைகளின் அளவை குறைத்தல்.

நகர குப்பை சேகரிப்பு வாகனங்களை இயக்குவதற்கு மற்றும் உணவகங்களில் சமைப்பதற்கும் உயிரிவாயுவை வழங்க பயோகேஸ் (உயிரிவாயு) ஆலைகளை செயல்படுத்துதல் போன்ற பல திட்டங்களை அறிந்து அவற்றை திருச்சி மாநகராட்சியில் செயல்படுத்தும் வகையில் இந்த சுற்றுப்பயணத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதேபோல் மீதம் உள்ள 37 வார்டு ஆண் கவுன்சிலர்களும் விரைவில் சுற்றுப்பயணமாக அழைத்து செல்லப்படுவார்கள் என மேயர் அன்பழகன் ெதரிவித்தார்.

The post சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாத திட்டங்கள் அறிய 28 பெண் கவுன்சிலர்கள் ஆந்திரா பயணம் appeared first on Dinakaran.

Related Stories: