25 சதவீத அபராத கட்டணமின்றி தொழில் உரிமம் பெற வாய்ப்பு

 

ஓசூர், பிப்.12: ஓசூர் மாநகராட்சியில் 25 சதவீத அபராத கட்டணமின்றி தொழில் உரிமம் பெற வரும் 15ம் தேதி கடைசி நாள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாநகராட்சி ஆணையாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: ஓசூர் பகுதியில் செயல்பட்டு வரும் அனைத்து கடைகள் மற்றும் நிறுவனங்கள் உரிய முறையில் விண்ணப்பித்து, தொழில் உரிமம் பெறுவது கட்டாயம். ஆனால், பெரும்பாலான கடைகள் மற்றும் நிறுவனங்கள் உரிமம் பெறாமல், உள்ளாட்சி அமைப்புகளின் சட்ட விதிகளை மீறி செயல்பட்டு வருகிறது. பிப்ரவரி 15க்குள் அனைத்து கடைகள் மற்றும் நிறுவனங்கள் தொழில் உரிமம் பெற விண்ணப்பிக்க வேண்டும். தவறும் பட்சத்தில் கூடுதலாக 25 சதவீதம் அபராதம் செலுத்த வேண்டும். தொழில் உரிமம் பெறாமல் உள்ளாட்சி அமைப்புகளின் சட்ட விதிகளை மீறி செயல்பட்டு வரும் கடைகள் மற்றும் தொழில் நிறுவனங்கள் மாநகராட்சி மூலம் பூட்டி சீல் வைக்கப்படும் என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

எனவே, வியாபாரிகள், தொழில் நிறுவன உரிமையாளர்கள் உடனடியாக tnurbanepay.tn.gov.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பித்து தொழில் உரிமம் பெற்றுக் கொள்ளுமாறும், அபராத கட்டணத்தை தவிர்த்துக் கொள்ளுமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறது. ஆன்லைன் மூலம் மூலமாக விண்ணப்பம் செய்வதில் ஏதேனும் சந்தேகங்கள் இருப்பின் தங்களது பகுதிக்குட்பட்ட துப்புரவு ஆய்வாளர்கள், துப்புரவு மேற்பார்வையாளர்கள் அல்லது மாநகராட்சி அலுவலகத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள உதவி மையத்தை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

The post 25 சதவீத அபராத கட்டணமின்றி தொழில் உரிமம் பெற வாய்ப்பு appeared first on Dinakaran.

Related Stories: