சுகாதாரக்கேடு அபாயம்: கட்டிட மராமத்து பணிக்காக வீரசோழன் பள்ளியில் ஆய்வு

திருச்சுழி, மார்ச் 20: நரிக்குடி அருகே வீரசோழன் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்குள்ள பெரும்பாலான கட்டிடங்கள் மிக பழமை வாய்ந்த கட்டிடங்கள். இருபது வருடங்களுக்கு மேலாகி இடிந்துவிழும் நிலையில் ஆங்காங்கே கான்கிரீட்கள் பெயர்ந்து விழுகின்றன. மாணவர்கள் படிக்கும் இடங்களில் அவ்வப்போது காரைகள் பெயர்ந்து விழுகின்றன. மூன்று வகுப்பறை கட்டடங்களும், நூலக கட்டிடம் முழுவதும் சேதமடைந்து காணப்படுகின்றன. இது சம்பந்தமாக மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை புகார் கொடுத்தும் எந்தவித நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

சமீபத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் சேர்மனாக பஞ்சவர்ணம், துணை சேர்மனாக ரவிச்சந்திரனும் வெற்றி பெற்றனர். இதன்பிறகு வீரசோழன் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் நரிக்குடி ஒன்றிய அலுவலகத்தில் துணை சேர்மன் ரவிச்சந்திரனிடம் கோரிக்கை மனு அளித்தார். கோரிக்கை மனுவை ஏற்று உடனடியாக பள்ளிக்கு சென்று சேதமடைந்த கட்டிடங்களை நேரில் பார்வையிட்டார். பின்னர் தலைமையாசிரியர் முருகேசனிடம், இது சம்மந்தமாக பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜியிடம் தெரிவித்து நிதி ஒதுக்கப்பட்டு விரைவில் கட்டடங்கள் மற்றும் சுற்றுச்சுவர் எழுப்பப்படும் என கூறினார்.

Related Stories: