ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளியில் ஆண்டு விழா

போடி, மார்ச் 19: சின்னமனூர் அருகே அழகாபுரி முத்துகிருஷ்ணாபுரத்தில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் ஆண்டு விழா நடந்தது. விழாவிற்கு கிராம கல்விக் குழுத்தலைவர் பாண்டி தலைமை வகித்தார், சின்னமனூர் வட்டார கல்வி அலுவலர்கள் ஹெலன் மெட்டில்டா, சுபாஷினி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியர் ரமாபிரபா வரவேற்றார். 1 முதல் 5ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு நடந்த விளையாட்டு போட்டிகள், அதிக மதிப்பெண்கள் எடுத்தவர்களுக்கு பரிசுகள் சான்றிதழ் வழங்கப்பட்டது.

மாணவர்கள் வல்லுப்பாட்டின் மூலமாக கொரோனா வைரஸ் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தினர். அழகாபுரி கிராம ஊராட்சி மன்ற தலைவர் பாண்டியராஜன், ராயப்பன்பட்டி கிராம ஊராட்சி மன்ற தலைவர் பால்ராஜ், சின்னமனூர் வட்டார வளமைய மேற்பார்வையாளர் வெங்கடாசலம், அப்பிபட்டி ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் வேல்த்தாய், புலிகுத்தி ஊராட்சி பள்ளி எச்.எம் பீட்டர், ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர்கள் செல்வகுமார், பாஸ்கரன், போடி எஸ்ஐ ஜெகநாதன், ஆசிரியர்கள் மாணவர்கள், கிராம மக்கள் பலரும் கலந்து கொண்டர். ஆசிரியர் தாமஸ் நன்றி கூறினார்.

Related Stories: