ஜெயலலிதாவின் மணல் சிற்பத்திற்கு அதிமுக.வினர் மலர் தூவி மரியாதை

பரமக்குடி, பிப்.25:  ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு வடிவமைக்கப்பட்ட மணல் சிற்பத்திற்கு எம்எல்ஏ சதன் பிரபாகர் மற்றும் அதிமுக.வினர் மலர்தூவி மரியாதை செலுத்தினர். தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 72வது பிறந்தநாள் விழா நேற்று தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டது. இதனையடுத்து ராமநாதபுரம் மாவட்ட அதிமுக சட்டமன்ற தொகுதி சார்பாக எம்.எல்.ஏ. அலுவலகம் முன்பு ஜெயலலிதாவின் உருவம்  மணல் சிற்பமாக உருவாக்கப்பட்டது. இந்த மணல் சிற்பத்திற்கு எம்எல்ஏ சதன்பிரபாகர் மலர் தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து அதிமுக.வினர் அஞ்சலி செலுத்தினர். பேருந்து நிலையம், பாலன் நகர், கிருஷ்ணா தியேட்டர் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட இடங்களில் கட்சி கொடியும் ஏற்றப்பட்டது. கேக் வெட்டி, இனிப்புகள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.

பரமக்குடி பேருந்து நிலையத்தில் நகர் அம்மா பேரவை நகர செயலாளர் வடமலையான் தலைமையில் ஜெயலலிதாவின் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. பேருந்து நிலையத்தில் இருந்த பயணிகளுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் நகர செயலாளர் கணேசன், மாநில பொதுக்குழு உறுப்பினர் நாகராஜன், பரமக்குடி ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர் சரயு ராஜேந்திரன், மாவட்ட சிறுபான்மை பிரிவு பொருளாளர் அப்துல் மாலிக் உள்ளிட்டோர் கலந்துகொண்டு ஜெயலலிதாவின் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

அரியனேந்தல் கிராமத்தில் அமைக்கப்பட்டிருந்த ஜெயலலிதா படத்திற்கு பரமக்குடி ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர் சரயூ ராஜேந்திரன் மற்றும் அதிமுக நிர்வாகிகள் மலர்தூவி மரியாதை செலுத்தினர். பரமக்குடி தொகுதியிலுள்ள நயினார்கோவில், பரமக்குடி, போகலூர் உள்ளிட்ட கிராமங்களில் அமைக்கப்பட்டிருந்த கட்சி கொடியை ஏற்றிய எம்எல்ஏ சதன்பிரபாகர் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். மேலும் அதிமுக மூத்த தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளை சந்தித்து பொன்னாடை அணிவித்து  வாழ்த்து தெரிவித்தார்.

Related Stories: