ஹெல்மெட் அணிந்து வாகனங்கள் ஓட்ட வேண்டும்

ஊத்துக்கோட்டை, ஜன.29: ஊத்துக்கோட்டை அருகே பூண்டி ஒன்றியம் நந்திமங்கலம் கிராமத்தில் நேற்று முன்தினம் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இதில் ஊராட்சி மன்ற தலைவர் கீதா முரளி தலைமையிலும், இதே போல் போந்தவாக்கம் ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் சித்ரா பாபு தலைமையில் துணைத்தலைவர் அஞ்சலி, திமுக ஒன்றிய கவுன்சிலர் பிரசாந்தி ரவி முன்னிலையில் நடந்த கிராம சபை கூட்டத்திலும், எல்லாபுரம் ஒன்றியம் பனப்பாக்கம் கிராமத்தில் நடந்த கிராம சபை கூட்டத்திற்கு ஊராட்சி தலைவர் நெப்போலியன் தலைமையில் திமுக ஒன்றிய கவுன்சிலர் குணசேகரன் முன்னிலையிலும் என 3 ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டங்கள் நடந்தன.

காவல் துறை வேண்டுகோளுக்கு இணங்க, இரு சக்கர வாகன ஓட்டிகள் வாகனத்தில் செல்லும் போது ஹெல்மெட் அணிந்து ஓட்டவும் மற்றும் ஓட்டுநர் உரிமம், வாகன காப்பீடு அவசியம் இருக்க வேண்டும். மேலும் குடி போதையில் வாகனம் ஓட்டக்கூடாது. மீறி ஓட்டினால் சிறை தண்டனையும், ரூ. 10 ஆயிரம் அபராதம் நீதி மன்றத்தால் விதிக்கப்பட்டு, ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படும். 18 வயதுக்கு குறைந்த நபர் வாகனம் ஓட்டினால் அவருடைய பெற்றோர் அல்லது வாகன உரிமையாளர் தண்டிக்கப்படுவார்கள் என்பதை பொதுமக்களுக்கு தெரிவித்து கிராம சபைகளில்  தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Related Stories: