கச்சத்தீவு விழாவிற்கு செல்ல டீசல் செலவை அரசே ஏற்க வேண்டும் மீனவர்கள் கோரிக்கை

சாயல்குடி, ஜன.29: கச்சத்தீவு திருவிழாவிற்கு செல்ல டீசல் செலவை அரசு ஏற்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்ட அனைத்து மீனவர்கள் சங்க பிரதிநிதிகள் கலெக்டர் வீரராகவராவிடம் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது, வருகின்ற மார்ச் 7 மற்றும் 7ம் தேதிகளில் கச்சத்தீவு திருவிழா நடக்கிறது. கடந்த ஆண்டு போல உயர்நீதிமன்ற உத்தரவின் படி நாட்டு படகில் குடும்பத்தாருடன் சென்று வர அனுமதிக்க வேண்டும். இந்தாண்டு மாவட்டத்தின் அனைத்து பகுதிகளை சேர்ந்த மீனவ குடும்பத்தினர் 30 நாட்டு படகுகளில் 20 பேர் என்ற வீதத்தில் 600 பேர் செல்ல திட்டமிட்டுள்ளோம். நாட்டுபடகில் கச்சத்தீவு சென்று வர சுமார் 50 லிட்டர் டீசல் செலவாகும். இதனை அரசு ஏற்க வேண்டும். உள்ளூர் விடுமுறை அளிக்க வேண்டும். மீன்பிடி விசைபடகில் கட்டணம் வசூல் செய்து செல்வதை தடைசெய்ய வேண்டும் என உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. எனவே மீன்பிடி விசைபடகில் செல்வதை தடை செய்து, பாதுகாப்பு அம்ச பொருட்களை வழங்கி, நாட்டுபடகில் சென்றுவர அனுமதிக்க வேண்டும் என கூறியுள்ளனர்.

Related Stories: