பரவனாற்றில் விழுந்த போர்வெல் துளைபோடும் இயந்திரம் மீட்பு

சேத்தியாத்தோப்பு, ஜன. 28: சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது கரைமேடு பரவனாற்று பாலம். கட்டப்பட்டு முப்பதாண்டுகளுக்கு மேலாகிறது. சென்னை-கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் மிகவும் குறுகிய பாலமாக இருப்பதால் இப்பாலத்தில் அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் இப்பாலத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கடலூரிலிருந்து சாத்தப்பாடிக்கு சென்ற போர்வெல் துளைபோடும் இயந்திர வாகனம்

இப்பாலத்தினை கடக்க முற்பட்டபோது எதிர்பாராமல் பரவனாற்றில் விழுந்தது. அப்போது அந்த வாகனத்தில் இருந்த ஓட்டுநரும், கிளினரும் சிறிய காயங்களுடன் உயிர்தப்பினர். பிறகு சேத்தியாத்தோப்பு மற்றும் வடலூர் போலீசார் வந்து போக்குவரத்து சீரமைப்பு பணியில் ஈடுபட்டனர். இதனையடுத்து ராட்சத கிரேன் வரவழைக்கப்பட்டு ஒரு மணி நேரத்திற்கு மேலாக போராடி ஆற்றுக்குள் விழுந்த போர்வெல் துளையிடும் இயந்திர வாகனம் மீட்கப்பட்டது. இதனால் பரவனாற்று பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: